மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உலக தந்தையர் தினம் நாளை (ஜூன் 18) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தந்தையர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான 4 படங்களை ஒளிபரப்புகிறது. அதன் விபரம் வருமாறு:
சபாபதி
பேச்சு திறன் குறைபாடுள்ள சபாபதி தன் சொந்த தந்தையாலேயே குறைத்து மதிப்பிடப்படுகிறார். சபாபதி எப்படி வாழ்க்கையில் ஜெயித்து காட்டுகிறார். அதற்கு தந்தை எந்த அளவிற்கு காரணமாக இருக்கிறார் என்கிற கதை அம்சம் கொண்ட படம். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ப்ரீத்தி வர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். ஆர்.சீனிவாசராவ் இயக்கி இருந்தார். மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
60 வயது மாநிறம்
இளையராஜாவின் இசையில், ராதா மோகன் இயக்கத்தில் இந்த படம் அப்பா-மகனுக்கு இடையேயான மென்மையான உறவைப் பற்றி பேசிய படம். சிவா (விக்ரம் பிரபு), ஒரு லட்சியமிக்க மென்பொருள் பொறியாளர், வெளிநாட்டில் வேலையில் சேரும் தனது கனவைத் தொடர தனது தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டுவிடுகிறார். அப்போது முதியோர் இல்லத்தில் ஏற்படும் ஒரு குழப்பத்தில், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட சிவாவின் தந்தை கோவிந்தராஜன் (பிரகாஷ் ராஜ்) காணாமல் போகிறார். அப்படி காணாமல் போகும் கோவிந்தராஜன், ரவுடி ரங்கா (சமுத்திரக்கனி) செய்யும் கொலைக்குற்ற சம்பவத்தை நேரில் பார்த்துவிடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது இந்த படத்தின் கதை. பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சில நேரங்களில் சில மனிதர்கள்
அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் -காலமும் சூழலும் மனிதர்களை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை மனித உளவியல் அடிப்படையில் பேசும் ஒரு உணர்வுப்பூர்வமான படம். மொபைல் போன் விற்கும் கடையில் வேலைப்பார்க்கும் விஜயகுமார் (அசோக் செல்வன்), தாயை இழந்தவர். அவரது தந்தை பணி ஓய்வுப்பெற்ற செல்வராஜ் (நாசர்) மகன் மீது அளவற்ற அன்பு காட்டுபவர். மகனின் திருமண பத்திரிக்கையை கொடுக்கப்போகும் வழியில் ஒரு விபத்தில் இறந்துப்போகிறார். அந்த மரணத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ மூன்று இளைஞர்கள் காரணமாகின்றனர். விஜயகுமார் உட்பட வெவ்வேறு வாழ்க்கையை வாழும் இந்த மூவரையும் ஒரு மரணம் எப்படி தங்கள் தவறுகளிலிருந்து திருத்துகிறது என்பதே இந்தப்படம். மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
காலேஜ் குமார்
ஹரி சந்தோஷ் இயக்கத்தில் வெளிவந்த படம். மகன்களை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என கனவு காணும் அப்பாக்களுக்கும், அவர்களின் கனவை அசட்டை செய்யும் மகன்களுக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டம்தான் இந்த படம். தனது அலுவலகத்தில், தன்னுடைய உயர் அதிகாரியால், வெறும் பியூன் தானே நீ என் அசிங்கப்படுத்தப்படும் திருக்குமரன்(பிரபு) தனது மகனை எப்படியாவது அந்த உயர் அதிகாரியின் பதவியில் உட்கார வைப்பேன் என சபதம் எடுக்கிறார். ஆனால் மகனோ, பொறுப்பில்லாமல் நடந்ததால் கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்யப்படுகிறார். எப்படியாவது எடுத்த சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பாவே கல்லூரிக்கு சென்று படிக்கிறார். அவரது சபதம் நிறைவேறியதா என்பதே மீதி கதை. இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.