லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
உலகம் முழுவதும் இன்று(ஜூன் 20) தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவர்களது அப்பாக்கள் பற்றி தங்களது அன்பான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசனும், அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் ஆகியோர் பிரபலமானவர்கள். தனது அப்பா பற்றி அடிக்கடி ஏதாவது குறிப்பிட்டு வருபவர் ஸ்ருதிஹாசன்.
இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, “நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ளும் நபரும், உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் நபரும் உங்கள் பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மகிழ்ச்சியான தந்தையர் தினம். எனது அன்பான அப்பாவாக இருப்பதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் 'லாபம்' படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபாஸ் ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்து வருகிறார்.