அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி |
பட்டிமன்ற பேச்சாளர் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகும் படம் 'அழகிய கண்ணே'. இயக்குனர் சீனு ராமசாமியின் தம்பி ஆர்.விஜயக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் லியோ சிவகுமார் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். பட விழாவில் சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது:
பத்திரிகையாளரை சந்திக்க போகிறேன் என்றால் திருமண வீட்டுக்கு செல்வதை போல மகிழ்ச்சியுடன் என்னை அலங்கரித்துக் கொண்டு செல்வேன். நான் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும், சந்தித்தாலும், சந்திக்காவிட்டாலும் என்னை பற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து எழுதுகிறார்கள். என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவர்களுக்கு என் நன்றிகள்.
நான் சினிமாவுக்கு வந்து 16 வருடங்கள் ஆகிறது. நான் புதிய இயக்குனர்கள், புதிய நடிகர்களுடன் நடித்தால் அந்த படம் வெற்றி பெறும் என்கிற செண்டிமென்ட் இருக்கிறது. இந்த படத்திலும் புது இயக்குனர், புது நடிகர்தான் எனவே இந்த படமும் வெற்றி பெறும். நான் 15 புதிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் நான் மாணவி, காதலி, மனைவி, தாய் என்கிற 4 பரிமாணங்களில் நடித்திருக்கிறேன்.
இது உதவி இயக்குனர்களின் கதை. இயக்குனர் விஜயகுமார் உதவி இயக்குனராக இருந்தபோது கிடைத்த அனுபவங்களை கொண்டுதான் இந்த படத்தை இயக்கி உள்ளார். படப்பிடிப்பின்போது நெருக்கமான நண்பர்களாகிறவர்கள் உதவி இயக்குனர்கள். அப்படி நண்பர்களாகும்போது அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை பற்றி சொல்வார்கள் அது வருத்தமாக இருக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் பல இயக்குனர்களும் பல கஷ்டங்களை கடந்து வந்தவர்கள்தான். மதுரையில் இருந்து இயக்குனராகும் கனவுடன் சென்னை வந்த ஒரு இளைஞனை பற்றிய கதைதான் இந்தப் படம்.
நாயகன் சிவா குடும்பம் எப்போதும் செட்டில் இருப்பார்கள். என் அம்மாவிடம் என்னை ஏஞ்சல் போலப் பார்த்துக் கொள்கிறார்கள் என்றேன். ஷூட்டிங் அனுபவம் அப்படி தான் இருந்தது. எனக்கு மிக முக்கியமான பாத்திரம், ஐடியில் வேலை பார்க்கும் சென்னைப் பெண், என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.