நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதன் பிறகு மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்தவர், பின்னர், சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் படுக்கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தற்போது போகி பாபு நடித்து வரும் மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அந்தமான் தீவுக்கு சென்று இருந்தார் தர்ஷ குப்தா. அங்கு பிகினி உடையில் போட்டோசூட் நடத்தி தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகிறது.