அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
நடிகர் விஜய் சேதுபதி நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி படமாகியது. தற்போது இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி மலேசியா சென்றுள்ளார்.
மேலும் ஹிந்தியில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக கத்ரினா கைப் நடிக்கிறார். ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இப்படம் வெளியாவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் இந்த படம் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் கபாலி படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர்கள் ரகசியமாக வைத்துள்ளார்களாம்.