AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், சுனில், யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் மாவீரன். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ஜூலை 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்டமாக புரமோஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மேலும், இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த டான், பிரின்ஸ் போன்ற படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. அதேபோல் இந்த மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இதே கல்லூரியில் தான் நடைபெற உள்ளதாம். இப்படத்தின் இசை விழா ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.