பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
கடந்த 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் வட சென்னை. இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து வெற்றிமாறனுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது வட சென்னை-2 படம் குறித்து தான் அளித்த பேட்டியில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அதில், வட சென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி ராஜன் வகையறா என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிடுவதற்கு தயாராக வைத்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். அந்த படத்தை அவர் சீக்கிரமே வெளியிட வேண்டும் என்றும் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.