துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
கேஜிஎப், காந்தாரா படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் 'தூமம். இந்தப் படத்தை யூ டர்ன், லூசியா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பவன்குமார் இயக்குகிறார். பஹத் பாசில் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரோஷன் மாத்யூ, வினீத் ராதாகிருஷ்ணன், அனு மோகன், அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூர்ணச்சந்திர தேஜஸ்வி இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'தூமம்' என்றால் புகை என்று பொருள். படம் போதை புகை பழக்கத்தின் பின்னணியில் உருவாகிறது. திடீர் கோடீஸ்வரனாக விரும்பும் படத்தின் நாயகன் போதை பொருள் கடத்தலை கையிலெடுத்து சிக்கலில் மாட்டுவது மாதிரியான கதை என்பது டிரைய்லரில் இருந்து தெரிய வருகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த படமாக உருவாகி உள்ளது.