துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் என்.டி.பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்போது 'பகவந்த் கேசரி' என்று டைட்டில் அறிவித்துள்ளனர். பகவந்த் என்பது அவர் நடிக்கும் கேரக்டரின் பெயராக இருக்கலாம். கேசரி என்றால் சிங்கம் என்று பொருள். படத்தின் டேக் லைனாக 'ஐ டோன்ட் கேர்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பாலகிருஷ்ணாவின் 108வது படமாக உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார்கள். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இந்தப் படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி வருகிறது. இந்த படமும் பாலையாவின் முந்தைய படங்கள் போன்று அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.