ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் ஆகி இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்துடன் ஒரு போட்டோ சூட் நடத்தி மகிழ்ச்சியை கொண்டாடி உள்ளார்கள்.
அந்த போட்டோக்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், என் உயிரின் ஆதாரம் நீங்கள் தானே. கடந்த ஓராண்டு ஏற்ற இறக்கம், பின்னடைவுகள், சோதனைகள் இருந்தாலும் அதிகப்படியான அன்பும் பாசமும் கொண்ட குடும்பத்தை பார்க்க வீட்டிற்கு வருவது நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இருந்தது. அடைய விரும்பும் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலையும் குடும்பம் அளிக்கிறது. சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க பாடுபடுவது தான் என் போன்றவர்களுக்கு தேவையான ஊக்கம்'' என்று மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் பதிவிட்டு இருக்கிறார் .