மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆதிபுருஷ்'. ஜுன் 16ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நேற்று திருப்பதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரபாஸ், கிரித்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் உள்ளிட்டோர் நேற்றைய விழாவில் பங்கேற்றார்கள்.
நேற்று அதிகாலையில் பிரபாஸ் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். நேற்று மாலையில் நடைபெற்ற 'ஆதிபுருஷ்' விழாவுக்காக படத்தின் இயக்குனர் ஓம் ராவத், கதாநாயகி கிரித்தி சனோன் ஆகியோர் நேற்று மதியம்தான் மும்பையில் இருந்து திருப்பதி வந்தார்கள். அதனால் இன்று காலையில் கிரித்தி சனோன், ஓம் ராவத் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வழிபட்டார்கள்.
“திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் அற்புதமாக உள்ளது. சிறப்பான தரிசனம் கிடைத்தது. நேற்று படத்தின் டிரைலரை வெளியிட்டு, இன்று கோவிலுக்கு வந்தது பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை, மகிழ்ச்சியாக உள்ளது,” என இயக்குனர் ஓம் ராவத் தெரிவித்தார்.