Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்!

06 ஜூன், 2023 - 05:29 IST
எழுத்தின் அளவு:
Prabhas-seeks-blessings-of-Lord-Venkateswara-at-Tirumala-temple-ahead-of-'Adipurush'-event

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் பிரபாஸ். ஆனபோதிலும் அதன்பிறகு அவர் நடித்த சாஹோ, ராதேஷ்யாம் போன்ற சில படங்கள் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தன. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்திருக்கும் ஆதிபுருஷ் படம் வருகிற ஜூன் 16ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ராமாயண கதையில் உருவாகி உள்ள இந்த படத்தில் அவர் ராமராக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் 600 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இன்று மாலை ஆதிபுருஷ் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் பிரபாஸ். இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் ... திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)