ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. கிரிக்கெட் ரசிகர்கள் இவரை அன்போடு தாதா என்று அழைப்பார்கள். 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்குள் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் தலைதூக்கிய பிறகு கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்று உருவாக்க இருப்பதாக கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், இப்போது கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் கங்குலியை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இப்படம் இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது என கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த படத்தில் கங்குலியாக நடிக்க ரன்பீர் கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படம் கங்குலியின் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து பின்னர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் வைத்து உருவாகிறது என்கிறார்கள்.




