நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது |
நடிகர் சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை படம் வரவேற்பை பெற்றது. வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இதன் அடுத்தபாகம் செப்டம்பரில் ரிலீஸாக உள்ளது. விடுதலை முதல்பாக வெற்றியை தொடர்ந்து சூரி அடுத்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கொட்டுக்காளி. நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன இந்த படத்தை 'கூழாங்கல்' பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. அதனை படக்குழுவினர்களுடன் உள்ள போட்டோ உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.