கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள திரைப்படம் டக்கர். திவ்யன்ஷா கவுசிக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஷ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 2016 ஆண்டில் வெளியாக வேண்டியது. ஒரு சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு வருகின்ற மே 26 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 9ம் தேதி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.