பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்றைய தேதியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்து பிரபலமான சமயத்தில் இருந்தே இருவருக்குள்ளும் காதல் இருக்கிறது என்கிற செய்தி இப்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது. இவர்கள் இருவருமே தாங்கள் நட்பாக மட்டும் தான் பழகுகிறோம் என்று பலமுறை கூறியுள்ளனர். அதேசமயம் சமீப நாட்களாக விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும், இன்னொரு தெலுங்கு நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் என்பவருடன் ராஷ்மிகா நெருங்கி பழகுகிறார் என்றும் கூட செய்திகள் வெளியாகின.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளுக்கு ராஷ்மிகா வாழ்த்து தெரிவிக்காததும் இந்த செய்'தீ'க்கு இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றியது. இந்தநிலையில் அந்த வதந்தியை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள பேபி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டார் ராஷ்மிகா மந்தனா.
மேடையில் அவர் பேச ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு இருந்த விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் அவரை 'வதினா' (அண்ணி) என அழைத்து தொடர்ந்து கோஷம் போட அதைக் கேட்டு பேசுவதை நிறுத்திவிட்டு வெட்கத்தாலும் சிரிப்பாலும் முகம் சிவந்து விட்டார் ராஷ்மிகா. அதுமட்டுமல்ல அந்த விழாவில் பேசிய ஆனந்த் தேவரகொண்டா, டியர் காம்ரேட் படத்தில் இடம்பெற்ற நீ நீலி கண்ணுலோனா என்கிற பாடலை ராஷ்மிகாவுக்கு டெடிகேட் செய்வதாக கூறியதுடன் அந்த பாடலை மேடையிலும் பாடியபோது முகத்தில் மகிழ்ச்சி ததும்ப கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தார் ராஷ்மிகா.
இதன்மூலம் தனக்கும் விஜய் தேவரகொண்டாவுக்குமான நட்பு இன்னும் ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளார் ராஷ்மிகா.