ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் வெங்கட்பிரபு. அதே சமயம், இவர் இயக்கிய மாஸ், பிரியாணி போன்ற படங்கள் தோல்வியும் அடைந்தன. மாநாடு படத்துக்கு பிறகு தமிழ் , தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் அவர் இயக்கிய கஸ்டடி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 12ம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் கலவையான விமர்சனங்களை சந்தித்த இந்த படம் திரைக்கு வந்து 6 நாட்களில் இதுவரை 10 கோடி ரூபாய் கூட வசூலிக்க வில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், தமிழ் இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் போலீஸ் கதையில் இயக்கிய தி வாரியர் படத்தைப் போலவே, இன்னொரு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை வைத்து போலீஸ் கதையில் வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த கஸ்டடி படமும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாமல் அதிர்ச்சி தோல்வி அடைந்து இருக்கிறது. அதோடு இந்த இரண்டு படங்களிலுமே நாயகியாக நடித்தவர் கிர்த்தி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. கஸ்டடி படம் நிச்சயம் பெரியளவில் நஷ்டத்தை சந்திக்கும் என்கிறார்கள்.