ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. அந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் அவரை பாராட்டியதோடு, தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுமாறு தேசிங்கு பெரியசாமியிடம் கூறியிருந்தார். இதன் காரணமாக அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் படத்தை அவர் தான் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் ரஜினிக்கு ரெடி பண்ணிய அதே கதையை சிம்புவிடம் சொல்லி ஓகே செய்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் போர் வீரன் வேடத்தில் நடிக்கும் சிம்பு, அதற்கு தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக லண்டன் செல்லப் போகிறார். ஒரு மாதம் அங்கு தங்கி பயிற்சி பெற்று விட்டு அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.