இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
நடிகர் கார்த்தி தற்போது தனது 25வது படமான ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இதை ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகன் இயக்குகிறார். அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இப்போது இந்த படத்தை வருகின்ற விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 15 அன்று வெளியாக உள்ளதாம். ஏனெனில், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை உள்ளதால் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.