பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமாவில் தற்போது பெரும் பட்ஜெட் படங்களை தயாரிக்கும் நிறுவனமான லைகாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது லைகா தயாரிப்பு நிறுவனம். ரஜினியின் 2.0, தர்பார், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது. அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் 171வது படம் என அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம், வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்துள்ளது. சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.