2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

தெலுங்கு திரையுலகில் நடிகர் நாகார்ஜுனாவின் மகனான இளம் நடிகர் நாக சைதன்யா தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள கஸ்டடி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இளையராஜா-யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளனர். குறிப்பாக நாகசைதன்யா இந்த படம் தொடர்பாக யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்
தமிழில் இர்பான் வியூ என்கிற ஒரு யு-டியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்தபோது, அவரிடம் இரண்டரை வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்த பின்னர், நட்பாக இருப்போம் என அவரது மனைவி கூறியது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாகசைதன்யா பிரிவோம் என முடிவு செய்து பிரிந்த பின்னர் எதற்காக நண்பர்களாக இருக்க வேண்டும்..? பிரிந்த பின் நண்பர்களாக தொடர்வோம் என்று கூறும் வார்த்தையே என்னை அதிகம் கடுப்படிக்கிறது அப்படி ஒரு நட்பு தேவையில்லை” என்று பதில் அளித்துள்ளார்.