ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
2016ல் வெளியான பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை மிர்னா மேனன். அந்த படத்தில் நடித்த நடிகர் அபி சரவணனுடன் காதல் விழுந்து அவரை திருமணம் செய்ததாகவும் கூறப்பட்டது. அவருடன் ஒன்றாக வசித்து பின்னர் பிரிந்து பரபரப்பை ஏற்படுத்திய மிர்னா மேனன், அதன் பிறகு சில வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். திடீரென மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக சித்திக் இயக்கத்தில் வெளியான பிக் பிரதர் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. ஆனாலும் அந்த படம் கைகொடுக்காத நிலையில் மீண்டும் ஒரு இடைவெளி விழுந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான புர்கா என்கிற படத்தின் கதாநாயகியாக நடித்த மிர்னா மேனனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நிலையில் தெலுங்கில் அவர் அல்லரி நரேஷுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ள உக்ரம் என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதற்கெல்லாம் சிகரம் வைப்பது போல நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மிர்னா மேனன். கிட்டத்தட்ட 40 நாட்கள் இவரது காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால் ஜெயிலர் படம் வெளியான பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரம் நிச்சயம் தேடி வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் மிர்னா மேனன்.