துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனம் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் படமாக தயாராகி வரும் படம் 'எல்ஜிஎம்'. எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதற்காக படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்ட பிரத்யேக நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கவுள்ளது. விரைவில் படத்தின் டீசர், டிரைய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.