5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ‛ரங்கூன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று படக்குழுவினர் வீடியோ அறிவிப்புடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.