Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானியின் 30வது படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஸ்ருதிஹாசன்

30 ஏப், 2023 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Shruti-Haasan-to-play-a-key-role-in-Nani-30

தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அதோடு ‛தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் தற்போது அவர் நானி நடிக்கும் 30வது படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

நானிக்கு ஜோடியாக சீதா ராமம் புகழ் மிர்னாள் தாக்கூர் நடிக்கும் இப்படத்தை சவுரியவ் என்பவர் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. அதில் நானி, ஸ்ருதிஹாசன், மிர்னால் தாக்கூர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் மூலம் முதன்முறையாக நானியுடன் இணைந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மே 1ல் அஜித் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது!மே 1ல் அஜித் 62வது படத்தின் அறிவிப்பு ... ராஷ்மிகா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! ராஷ்மிகா படத்தின் முதற்கட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)