ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த சில நாட்களாக இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்போது படத்தின் படப்பிடிப்பில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் வெடிகுண்டு காட்சிகள் புலிகள் சரணாலயத்தில் பாம் பிளாஸ்ட் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக நேற்று மத்தளம் பாறையில் பகுதியில் நடைபெற்ற கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தென்காசி கலெக்டர் நிறுத்தியுள்ளார் .
இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு அதே மத்தளம் பாறை பகுதியில் துவக்கியுள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் முடித்த பிறகு தான் இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.