அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
குத்துச் சண்டை வீராங்கணையான ரித்திகா சிங், சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச் சுற்று' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 'ஆண்டவன் கட்டளை', 'சிவலிங்கா', 'ஓ மை கடவுளே' படங்களில் நடித்திருந்தார். இப்போது 'கிங் ஆப் கோதா' படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் சிலம்பாட்ட வீராங்கணையாக நடிக்கிறார். தன்னை கொடுமைப்படுத்தியவர்களை சிலம்பத்தை கொண்டே பழிவாங்குகிற மாதிரியான கதை. இந்த படத்திற்காக ரித்திகா சிங் முறைப்படி சிலம்பம் கற்று வருகிறார். இந்த படம் ஓடிடி வெளியீட்டுக்காக தயாராகிறது.