புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |
அப்பா மட்டும் தான் நடிப்பு, பாட்டு, டான்ஸ், கதை, கவிதை என கலக்குவரா ... நானும் அப்படி தான் என கலை திறமையால் வெள்ளித்திரையை தெறிக்க விடுவதில் இவருக்கு நிகர் இவரே... அப்பா புலி என்றால் நான் சிங்கம் என சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னேறும் ஸ்ருதி ஹாசன் மனம் திறக்கிறார்...
ஸ்ருதி எப்படி இருக்கீங்க, வாழ்க்கை எப்படி போகுது
நல்லா இருக்கேன்... இந்த ஆண்டு என்னோட 2 படங்கள் ரிலீஸ்க்கு இருக்கு. அடுத்த 2 படங்கள் இந்த ஆண்டின் கடைசியில் ரிலீஸ் ஆகும்.
மெகா பட்ஜெட்டில் உருவாகும் 'சலார்' படம் அப்டேட்
'பான் இந்தியா' படமாக வெளியாகும். இயக்குனர் பிரசாந்த் ,நடிகர் பிரபாஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறார்கள். 2020ல் துவங்கி இத்தனை ஆண்டுகளாக அவர்களோடு பழகும்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அப்பா கமல் செய்த விஷயங்களில் பண்ண முடியாதது
என் அப்பா அப்படிங்கறதால சொல்லலை... எந்த நடிகரை கேட்டாலும் அவர் பண்ணின விஷயங்கள் யாராலும் பண்ண முடியாததுன்னு சொல்லுவாங்க. ஏதாவது ஒரு வகையில பரிசோதனை முயற்சி செய்து கொண்டே இருப்பார், எதுக்கும் பயப்பட மாட்டார். அது எனக்கு பிடிக்கும்.
அப்பாவின் அரசியல், திரையில் அப்பாவின் பெஸ்ட் ஜோடி
அரசியல் பற்றி பெருசா சொல்வதற்கு இல்லை... எனக்கு அந்த அளவுக்கு அரசியல் தெரியாது. சின்ன வயசுல இருந்து நாங்க பார்க்கிறோம்... அப்போது இருந்து அவருக்கு சமூக பொறுப்பு இருக்கு. எப்படி பேசணும்னு எனக்கும், தங்கைக்கும் சொல்லி கொடுத்திருக்கார். சினிமாவில் பெஸ்ட் ஜோடி கண்டிப்பா ஸ்ரீதேவி தான்...
'ஹேராம்' முதல் 50க்கும் மேல் பல மொழிகளில் நடித்தது
இன்று வரை ஒவ்வொன்றும் கற்றுக் கொண்டு வருகிறேன். இந்த கால கட்டத்தில் சில தவறுகளும் செய்துள்ளேன், வெற்றிகளும் கொடுத்துள்ளேன்.. ஆனால், என் திரை பயணத்தை மிக ரசிக்கிறேன்.
அதிகம் தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லையே ஏன்
தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்க்கவில்லை. தெலுங்கில் நிறைய படங்கள் நடித்தேன். 2021ல் 'பேன் இந்தியா' படமாக முதலில் வெளியானது நான் நடித்த தெலுங்கு படம் 'கிராக்' தான். சலார், வால்ட்டர் வீரையா, வீர சிம்ம ரெட்டி இப்படி தெலுங்கு படங்கள் அமைந்தது. இந்த ஆண்டு தமிழில் நடிப்பேன்.
தனுஷ், விஷால், விஜய்சேதுபதி உடன் நடித்தது
யாரு கூட எந்த மொழியில் நடித்தாலும் அவங்க கிட்ட இருந்து நிறைய கற்றுக் கொள்வேன். சில நேரம் அவங்க கிட்ட கற்றுக் கொள்ளவே கூடாத விஷயத்தையும் கவனிச்சு இருக்கேன்..
உங்களோட அடுத்தகட்ட முயற்சி என்றால் அது என்ன
திரைக்கதை எழுத துவங்கியுள்ளேன். ஸ்டோரி லைன் கொஞ்சம் டெவலப் பண்ணிட்டு வரேன். பாட்டு. இசை என எப்போதும் வேலை பார்க்கிறேன். இப்போது கதைக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் ஒதுக்குறேன்..
லிவிங் டுகெதர், காதல்...
வெளியில் இருந்து பார்க்கும் மக்கள் கருத்து தான் மைனஸ். ரெண்டு பேருக்கும் ஒரு புரிதல் இருப்பது பிளஸ். உங்களை, வேலையை காதல் பண்ணுங்க. வாழ்க்கையில காதல் முக்கியம்.
சமையல் ஆர்வம், குறித்து
சாம்பார், வத்த குழம்பு, தக்காளி தொக்கு நல்லா சமைப்பேன்.சில 'ரெசிபி' பாட்டி, அத்தை கத்து கொடுத்தாங்க
ஆல்பம் சாங், அதற்குரிய மக்கள் வரவேற்பு
இரண்டு தனி ஆல்பம் சாங் ரெடியாயிட்டு இருக்கு. எல்லாம் சமூக வலைதளங்களில் இருப்பதால் மக்கள் என்ன விரும்புறாங்க, விரும்பலன்னு நல்லா தெரியுது.
ஸ்ருதி சினிமாவுக்கு மட்டும் வரலைன்னா...
இயக்குனராக, எழுத்தாளராக, இன்டீரியர் டிசைனராக, ஆர்க்கிட்டெக்டாக ஆகிருப்பேன். அதில் தான் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.