மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ம் தேதி 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. நேற்று இந்த படத்தின் ஆந்தம் பாடல் வெளியான நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கோயம்புத்தூரில் நடைபெறவிருக்கும் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாலை 4:30 மணிக்கு படக்குழுவினர் கலந்து கொள்கிறார்கள். இதில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் தாங்கள் சென்று இறங்கிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் விக்ரம். அந்த பதிவில் ‛கோயம்புத்தூர், இதோ வர்றோங்கண்ணா' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அவருடன் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.