கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இயக்கி, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்த படம் முதலில் நாளை வெளிவருதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மாங்காடு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், “பாண்டியராஜன் நடித்த ஆய்வுக்கூடம் என்ற படத்தை 2016ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டோம். அந்த படத்தின் கதையை எங்களிடம் கேட்காமல், பிச்சைக்காரன் 2 என்ற தலைப்பில் விஜய் ஆண்டனி எடுத்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் ஆண்டனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், மே மாதம்தான் இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளோம். எனவே, தடை எதுவும் பிறப்பிக்க வேண்டாம்'' என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.