நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கதிரேசன் தயாரிப்பு, இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ருத்ரன்' படம் நாளை ஏப்ரல் 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்திற்கு ஏப்ரல் 24 வரை படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இப்படத்தின் ஹிந்தி மற்றும் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையைப் பெற்ற ரெவன்சா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் 'ருத்ரன்' தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்தது. 12 கோடியே 25 லட்சத்திற்கு அதற்காக ஒப்பந்தம் போட்டு 10 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்த நிலையில், மேலும் தயாரிப்பாளர் 4 கோடி வேண்டும் என்று கேட்டதால் ரெவன்சா வழக்கு தொடர்ந்தது.
இப்படத்தின் உரிமையை வாங்கிய ரெவன்சா நிறுவனம் 20 கோடி வரை அந்த உரிமைகளை விற்று 7 கோடி வரை லாபம் பார்த்துவிட்டதாம். பட வெளியீட்டிற்கு முன்பாகவே அவ்வளவு லாபத்தை அந்த நிறுவனம் பார்த்ததால்தான் தயாரிப்பாளர் மேற்கொண்டு 4 கோடி கேட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மேல் முறையீட்டு மனு ஒன்றை தயாரிப்பாளர் தாக்கல் செய்துள்ளாராம். அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. தயாரிப்பாளர் தரப்பில் வேறு விளக்கம் தரப் போகிறார்களா அல்லது உரிமையை வாங்கிய ரெவன்சா நிறுவனத்துடன் சமரசம் பேசிவிட்டார்களா என்பது வழக்கு நடக்கும் போது தெரிய வரும்.
ஏப்ரல் 24ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை உத்தரவு இருந்தும் நாளிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக 'ருத்ரன்' படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று விளம்பரம் செய்து வருகிறது தயாரிப்பாளர் தரப்பு. இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா ?.