பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் வென்று பெருமை சேர்த்தது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும், அதற்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற அப்படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு புரமோஷன் நிகழ்வுகளிலும் படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யா கலந்து கொள்ளவில்லை. ஆஸ்கர் விருத வென்ற பின் விருதுகளுக்காக செலவழித்தது பற்றிய பேட்டி ஒன்றில் தான் எந்த ஒரு செலவையும் செய்யவில்லை, ராஜமவுலி எவ்வளவு செலவு செய்தார் என்பது தெரியாது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி, சந்திரபோஸ் ஆகியோருக்கு தெலுங்கு திரையுலகத்தினர் பாராட்டு விழா ஒன்றை நடத்தினர். அதில் தெலுங்குத் திரையுலகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்களும், தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தயாரிப்பாளரான தனய்யா கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொள்ளாதது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காக அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு அவர் பெயரளவில்தான் தயாரிப்பாளர் என்றும் சிலர் பேசிக் கொள்கிறார்கள். இது குறித்து தனய்யா சொன்னால்தான் உண்மை என்னவென்பது தெரிய வரும்.