படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஹரிகா. இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். இவருக்கும் வெங்கட சைதன்யா ஜொன்னலகட்டா என்பவருக்கும் கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் உதய்ப்பூரில் உள்ள ஓபராய் உதய்விலாஸில் திருமணம் நடந்தது.
கடந்த சில மாதங்களாகவே நிஹரிகா கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் என்று சொல்லப்பட்டது. கடந்த மாதம் நிஹரிகாவின் கணவர் வெங்கட சைதன்யா அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் நிஹரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்து, அவரையும் அன்பாலோ செய்தார். ஆனாலும், நிஹரிகா அவரை பாலோ செய்து கொண்டுதான் இருந்தார்.
ஆனால், தற்போது நிஹரிகாவும் அவருடைய இன்ஸ்டாவிலிருந்து வெங்கட சைதன்யா சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டு அவரை அன்பாலோ செய்துவிட்டார். விரைவில் இருவரும் அவர்களது விவாகரத்து பற்றிய அறிவிப்பை வெளியிடலாம். நிஹரிகா சமீபத்தில் சொந்தமாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழிலும் படங்களைத் தயாரிப்பாரா என்பது இனிமேல்தான் தெரியும்.