எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான வெற்றிப்படம் ‛வார்'. அவருடன் டைகர் ஷெரப்பும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதிரடி ஆக் ஷன் படமாக வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க, அயன் முகர்ஜி இயக்குகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் வேறு படத்தில் நடிக்க பிரபாஸ் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார். அதனால் பிரபாஸிற்கு பதில் இப்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடக்கிறது. அவருக்கு கணிசமான சம்பளமும் பேசி வருவதால் நிச்சயம் ஒப்புக் கொள்வார். விரைவில் அறிவிப்பு வரும் என்கின்றனர்.