சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது |

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா மற்றும் பலர் நடித்து கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி வெளியான படம் 'அயோத்தி'. விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு ரசிகர்களிடமும் பாராட்டுக்கள் குவிந்தது.
கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'அயோத்தி' படத்தைப் பார்த்து பாராட்டி டுவீட் செய்துள்ளார். “அயோத்தி…
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர்.மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!,” என்று பாராட்டியுள்ளார்.
அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்து சசிகுமார், “நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்,” என டுவீட் செய்துள்ளார். 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்த், சசிகுமார் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி, “உலகில் உள்ள அத்தனை விருதுகளும் ஒரு நொடியில் கிடைத்த மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் தருகிறது தங்களின் பாராட்டுகள்... நன்றி சார்,” என மகிழ்ந்துள்ளார்.