‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை |
வேலூரை சேர்ந்தவர் சாய் ரோஹினி. சென்னையில் நர்சிங் படித்த இவர் தற்போது நடிகையாகிவிட்டார். நடிப்புக்கான அவரது தேடலில் முதலில் வாய்ப்பு கிடைத்த படம் 'நாட் ரீச்சபிள்'. அதன்பிறகு துச்சாதனன், மிடில் கிளாஸ் படங்களின் வாய்ப்பு கிடைத்தது அதில் நடித்து வருகிறார்.
நடிக்க வந்தது பற்றி சாய் ரோஹினி கூறியதாவது: சினிமாவில் எனக்கு என்று தெரிந்தவர் யாருமில்லை. எனக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. எனக்கு சினிமாவின் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. பெற்றவர்களின் விருப்பத்திற்காக நர்சிங் படித்தேன். ஆனாலும் சென்னையில் இருந்து கொண்டு வாய்ப்புகளைத் தேடினேன். புதுமுகங்கள் தேவை என்கிற தகவல் கேள்விப்பட்டதும் அங்கு சென்று நான் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வேன். அப்படித்தான் எனக்குப் படவாய்ப்புகள் வந்தன.
என்னுடைய தோற்றத்திற்கும் நடிப்புத் திறமைக்கும் ஏற்ற வாய்ப்பு வந்தால் போதும் என்று நினைப்பேன். அதன்படிதான் இப்போது வாய்ப்புகள் வந்துள்ளன. அது மட்டும் அல்லாமல் என்னை நம்பி, தரப்படும் வாய்ப்புகளில் சரியாகப் பிரகாசிக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். என்கிறார் சாய் ரோஹினி.