ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருவதுடன் பாலிவுட்டிலும் நுழைந்துவிட்டார் நடிகை சமந்தா. ஆனால் இன்னும் பக்கத்து திரையுலகமான மலையாளத்தில் அவர் படம் எதிலும் நடிக்கவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் நிறைய தேடி வந்தாலும் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
தற்போது அவரது நடிப்பில் தெலுங்கு, தமிழில் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகன் மலையாள நடிகர் தேவ் மோகன், மிகவும் வரவேற்பு பெற்ற சூபியும் சுஜாதையும் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர். அதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கேரளாவிலும் நடைபெற்றன.
இதில் கலந்துகொண்ட சமந்தா பேசும்போது, “எனக்கு மலையாள படங்களை பார்ப்பதிலும் மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் அதிகம். என் அம்மா ஒரு மலையாளியாக இருந்தும் எனக்கு மலையாளம் கற்றுக்கொடுக்காமல் விட்டு விட்டார்கள். அதனால் அவர்கள் மீது எனக்கு இப்போதும் ஒரு வருத்தம் கூட இருக்கிறது. இங்குள்ள எனக்கு பிடித்தமான நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக மலையாளம் கற்றுக்கொள்வேன்.
மலையாள திரையுலகில் உள்ள ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர், எனக்கு சில நேரங்களில் ஒரே மாதிரியாக நடிக்கிறோமோ என்கிற எண்ணம் ஏற்பட்டால் உடனடியாக மலையாள படங்களை பார்த்து தான் எனது நடிப்பில் வித்தியாசம் காட்டுவதற்கு ஐடியாக்களை பெற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.




