பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
குறைவான நட்சத்திரங்கள், ஒரு பழைய வீடு, அதில் ஒரு பேய், அந்த பேய்க்கு ஒரு பிளாஷ் பேக், ஒரு பாதிரியார் வந்து பேய் விரட்டுவார். இதுதான் ஹாலிவுட் பேய் படங்களுக்கான டெம்பிளேட் கதை. தி எக்ஸ்சார்சிஸ்ட், கான்ஜூரிங், நன் இப்படியான படங்கள் இப்படித்தான் வந்தது. இப்போது அதே பாணியில் வருகிற படம் 'தி போப்ஸ் எக்ஸ்சார்சிஸ்ட்'.
இந்த படத்தில் ரசல் குரோவ் போப் கேப்ரியல் அமோர்த்தாக நடித்துள்ளார். இவர்கள் தவிர டேனியல் சோவாட்டோ, அலெக்ஸ் எஸ்ஸோ, பிராங்க் நீரோ உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அமோர்த் என்ற பாதிரியாருக்கு நடந்த நிஜமான நிகழ்வுகளை கொண்டது. அவர் எழுதிய குறிப்புகளை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. ஜூலியஸ் அவேரி இயக்கி உள்ளார்.
சோனி பிக்சர்ஸ் வெளியிடும் இந்த படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. முன்னதாக ஏப்ரல் 7ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது.