மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை தனுஷ் எழுதிய பாடிய ஒரு பாடலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். அதாவது ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் எழுதி பின்னணி பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகள் மிகச் சிறப்பாகவும் எளிமையாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ள கீரவாணி, தனுஷ் எழுதிய அந்த பாடலைப் போலவே நாட்டு நாட்டு பாடலையும் பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியிருக்கிறார் என்று ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்டு அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.