மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் |
ஏவிஎம் தயாரிப்பில், சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், லட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்து 1972ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'காசேதான் கடவுளடா'.
அப்படத்தை இயக்குனர் கண்ணன் மீண்டும் ரீமேக் செய்து அதே பெயரில் இயக்கியிருந்தார். மிர்ச்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி மற்றும் பலர் நடித்த அந்தப் படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. முதலில் காலை காட்சிகள் ரத்தானது. அடுத்த காட்சிகளுக்காவது படம் வெளியாகும் என்று எதிர்பார்த்தார்கள். இருப்பினும் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். படம் அடுத்து எப்போது வெளியாகும் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளார்கள். ஒரு அருமையான கிளாசிக் படத்தை ரீமேக் செய்கிறேன் என எடுத்து அதை திட்டமிட்டபடி வெளியிடக் கூட முடியாமல் போவது அந்த கிளாசிக் படத்திற்கான அவமரியாதை என்றுதான் சொல்ல வேண்டும். இனி, இப்படி எல்லாம் பழைய படங்களை ரீமேக் செய்து அதன் பெருமையைக் கெடுக்காதீர்கள் என ரசிகர்கள் கவலைப்படுகிறார்கள்.