ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமாவின் முன்னணி சண்டை இயக்குனர் கனல் கண்ணன். தீவிர தெய்வ பக்தி கொண்ட இவர் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராகவும் இருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பு நடத்திய் இந்து உரிமை பிரசார பயண நிறைவு விழாவில் கலந்து கொண்ட பேசியபோது, 'ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வெ.ரா.,வின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்' என்றார்.
அவரின் இந்த பேச்சு குறித்து த.பெ.தி.க மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில், கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 'கோவில் வாசலில் கடவுளை நம்புகிறவன் முட்டாள். கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி' என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சிலையை போலீசார் அகற்றியிருக்க வேண்டும். அதற்கு மாறாக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கனல் கண்ணன் மனுவை ஏற்றுக் கொண்டு, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.