லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இன்றைக்கு எல்லா மொழி படங்களுமே பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. முதன் முதலாக தமிழில் டப் செய்யப்பட்ட படம் 'தேவதாஸ்'.
பிரபல வங்கமொழி எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யாய எழுதிய நாவல்தான் 'தேவதாஸ்'. ஒரு பணக்கார பெண்ணுக்கும், ஏழை இளைஞனுக்கும் இடையிலான காதல் முலம் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க முரண்பாட்டை சொன்ன படம். இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் இது மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்த நாவலைத்தான் பிரம்மதேஸ் பருவா என்ற இயக்குனர் 1935ம் ஆண்டு திரைப்படமாக இயக்கி வெளியிட்டார். அவரே தேவதாசாக நடித்தார். அவர் மனைவி ஜமுனா பார்வதியாக நடித்தார். 4 பேர் ஒளிப்பதிவு செய்தனர். 3 பேர் இசை அமைத்தனர்.
வங்க மொழியில் தயாராகி பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம், அதே ஆண்டில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருந்தது. அந்த பாடல்களை கே.எல்.சைகல் என்பவர் தமிழில் பாடி கொடுத்தார். தொடர்ந்து 1936ம் ஆண்டு ஹிந்தியிலும், 1937ம் ஆண்டு அசாமி மொழியிலும் டப் செய்யப்பட்டது.
இந்த படம் புனேவில் உள்ள இந்திய திரைப்பட ஆவணக் காப்பத்தில் வைக்கப்ட்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் 60 சதவீத படச்சுருள் எரிந்து நாசமானது. தற்போது 40 சதவீத காட்சிகள் மட்டுமே வங்கதேச திரைப்பட ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திரைப்பட வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி இதுவே தமிழில் டப் செய்யப்பட்ட முதல் படம்.