இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்குகிறார். கோலார் தங்க வயல் கதையின் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் 3டி தொழில்நுட்பத்தில் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்க வயலில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 15 நாட்களில் அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னைக்கு இடம் பெயருகிறார்கள். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தோடு தங்கலான் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்று படக்குழு தெரிவிக்கிறது. அதன் பிறகு இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு 2023 ஆண்டு இறுதியில் தங்கலான் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.