மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்னணி மலையாள நடிகை ஸ்வேதா மேனன், கவர்ச்சியான வேடங்களில் நடிக்கும் நடுத்தர வயது நடிகை. தமிழில் சாது மிரண்டால், சந்தித்த வேளை, சினேகிதியே, அரவான், இணையதளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள அவர் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்வேதா மேனன் ஆன்லைன் மோசடியில் 57 ஆயிரம் ரூபாயை இழந்த தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அவர் மும்பை போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நான் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஒரு போன் அழைப்பு வந்தது. தொடர்ந்து அந்த போன் அழைப்பில் இருந்து எஸ்எம்எஸ் வந்தது. அந்த எஸ்எம்எஸ் லிங்கை கிளிக் செய்தவுடன், அந்த லிங்கில் கேட்கப்பட்ட ஐடி எண், பாஸ்வேர்ட் எண் மற்றும் ஓடிபி எண் ஆகியவற்றை போர்ட்டலில் டைப் செய்தேன். அடுத்த சில நிமிடங்களில் எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57,636 எடுக்கப்பட்டது. ஆனால், உண்மையில் வங்கியில் இருந்து எனக்கு போன் அழைப்பு வரவில்லை என்பதை பின்னர்தான் அறிந்து கொண்டேன். ஆன்லைன் பணமோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து மும்பை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.