ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று மீண்டுள்ளார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த சிட்டாடெல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று(நவ., 29) காலமாகி உள்ளார். இது சமந்தா மற்றும் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மறைவு பற்றி சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மீண்டும் நாம் சந்திக்கும் வரை அப்பா..." என்று உடைந்த இதய ஈமோஜியுடன் உருக்கமாக மனமுடைந்து ஒரு பதிவை போட்டுள்ளார்.
கணவர் நாகசைதன்யா உடன் பிரிவு, மயோசிடிஸ் நோய் பாதிப்பு என அடுத்தடுத்து துயரங்களை எதிர்கொண்டு வரும் சமந்தா இப்போது பெரும் துயரமாக தனது தந்தையை இழந்துள்ளார். இதையடுத்து சமந்தாவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.