சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியான படம் 'அமரன்'. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. 4 வாரங்களை கடந்து 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கை அமரன் படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் டில்லியில் அமைச்சரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மற்றும் இந்திய ராணுவம் குறித்து மிகச் சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கியதற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.