சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
நடிகர் அஜித்குமார் துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தினை லைகா நிறுவனம் தயாரிப்பதாக முதலில் அறிவித்தனர். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படமாக உருவாகியுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் யு-டியூப்பில் அளித்த நேர்காணல் ஒன்றில் முதல் முறையாக இது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதன்படி, "அஜித்திற்கு 'நானும் ரவுடி தான்' படம் மிகவும் பிடித்திருந்தது. அந்த சமயத்தில் அவரை நான் சந்தித்தபோது, நான் நிறைய படங்களை பார்ப்பதில்லை. ஆனால், நானும் ரவுடிதான் படத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். குறிப்பாக பார்த்திபன் கதாபாத்திரம் நன்றாக இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு ஸ்கிரிப்டை கொண்டு வாருங்கள். நாம் படம் பண்ணுவோம் என்றார். அதன் பின்னர் சொன்னபடியே ஒருநாள் அவர் என்னை தொடர்பு கொண்டு உங்கள் ஸ்டைலில் ஒரு படம் பண்ணலாம் என்றார்.
இது ஒரு பகுதி என்றால், மறுபுறம் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு முற்றிலுமாக வேறு மாதிரி சிந்தனைகள் இருந்தது. ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கும் போது இதெல்லாம் இருக்க வேண்டும் என விதிகளை வைத்திருந்தனர். எனக்கு அது எதுவும் புரியவில்லை. நான் கதை எழுதும்போதே இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை மாற்றியமைத்து தான் எழுதுவேன். என்னுடைய ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட மலையாளத்தில் வெளிவந்த 'ஆவேஷம்' படத்தை போன்றது.
நானும் பல மாஸ் தருணங்களை வைத்து தான் அந்த படத்தின் ஸ்கிரிப்டை எழுதினேன். அதை நான் தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது, அவர்கள், என்ன ரொம்ப காமெடியா இருக்கு என சொன்னார்கள். எமோஷனலோ, கருத்தோ இல்லை என்றார்கள். இது தான் அந்த படத்தில் இருந்து நான் வெளியேறியதற்கான காரணம்" என தெரிவித்துள்ளார்.