ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனர் பி வாசுவின் சித்தப்பாவுமான எம்சி சேகர் (91) வயது மூப்பு காரணமாக காலமானார்.
இயக்குனர் பி வாசுவின் தந்தையும், மேக்கப் கலைஞருமான பீதாம்பரத்தின் தம்பியான சேகர், 1986ல் திரையுலகில் அறிமுகமானார். ஆயிரம் கண்ணுடையாள், பன்னீர் புஷ்பங்கள், ரஜினியின் பணக்காரன், உழைப்பாளி, விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல், ரிக் ஷா மாமா, சரத்குமாரின் கூலி உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
பி வாசுவின் அனேக படங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது சாகோதரர் பீதாம்பரத்துடன் இணைந்து சில படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.
எம்சி சேகரின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.