காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கைதி. பாடல்களே இல்லாத இந்த படம் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது கைதி படத்தை ஹிந்தியில் போலா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் அஜய் தேவ்கன். அவரே தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். வருகிற மார்ச் 30ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.
அஜய் தேவகன் நாயகனான நடித்துள்ள இந்த படத்தில் தமிழில் நரேன் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் தபு நடித்திருக்கிறார். மேலும், கைதி ஹிந்தி ரீமேக் படத்தில் கமர்சியல் கருதி சில கேரக்டர்களையும் இணைத்துள்ளார் அஜய் தேவ்கன். அதாவது இப்படத்தில் அவரது மனைவி வேடத்தில் அமலாபால் நடிக்க, ஒரு ஐட்டம் பாடலில் ராய் லட்சுமி நடனமாடி இருக்கிறார். ஹிந்தி ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு இந்த ஐட்டம் பாடலை போலா படத்தில் இணைத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அஜய் தேவ்கன்.