Advertisement

சிறப்புச்செய்திகள்

தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுதா இயக்கத்தில் விஜய் மகன் சஞ்சய்?

14 பிப், 2023 - 05:24 IST
எழுத்தின் அளவு:
Director-Sudha-kongara-chasing-Vijay's-son-for-her-next-movie

துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. தற்போது சூரரை போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இதையடுத்து மீண்டும் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கப்போகிறார் சுதா. இந்த நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய்யை வைத்து ஒரு படத்தை இயக்க சுதா கொங்கரா முயற்சி எடுத்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் நரனின் வேட்டை நாய்கள் என்ற நாவலை தழுவி இந்த படத்தை அவர் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த கதைக்கு விஜய்யின் மகன் சஞ்சய் தான் பொருத்தமாக இருப்பார் என்பதால் இது குறித்த அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தற்போது விஜய்யின் மகன் சஞ்சய் தனது தாத்தாவைப் போலவே திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே நண்பர்களுடன் இணைந்து சில குறும்படங்களை இயக்கி உள்ள அவர், தற்போது வெளிநாட்டில் படம் இயக்குவது சம்பந்தப்பட்ட கோர்ஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் சுதா கொங்கராவின் முயற்சிக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரிலீசுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரிரிலீசுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ... கியாரா அத்வானிக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஆர்சி- 15 படக்குழு! கியாரா அத்வானிக்கு திருமண வாழ்த்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)